Home சினிமா 2 நாட்களில் லப்பர் பந்து செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் லப்பர் பந்து செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

லப்பர் பந்து

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளிவந்த தரமான திரைப்படங்களில் முக்கியமான ஒன்று லப்பர் பந்து. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்துக்கொண்டு, அதில் இருக்கும் சாதி அரசியலையும் தெளிவாக இப்படம் பேசியுள்ளது.

தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவான இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் சுவாசிகா, சஞ்சனா, தேவதர்ஷினி, டி எஸ் கே, பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் கலக்கி இருந்தனர்.

2 நாட்கள் வசூல்

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 70 லட்சம் வரை வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், இரண்டு நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இரண்டு நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் உலகளவில் ரூ. 2.1 கோடி வரை வசூல் செய்து பட்டையை கிளப்பி இருக்கிறது. கிட்டதட்ட இரண்டாவது நாளில் மட்டுமே கிட்டதட்ட ரூ. 1.4 கோடி வரை இப்படம் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Source: https://cineulagam.com/article/lubber-pandhu-movie-2-days-box-office-1726978819

NO COMMENTS

Exit mobile version