Home சினிமா வெற்றிகரமாக ஓடிய லப்பர் பந்து படத்தின் OTT ரிலீஸ் தேதியில் மாற்றம்… முழு விவரம்

வெற்றிகரமாக ஓடிய லப்பர் பந்து படத்தின் OTT ரிலீஸ் தேதியில் மாற்றம்… முழு விவரம்

0

லப்பர் பந்து

அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான படம் லப்பர் பந்து.

உள்ளூர் அளவிலான ரப்பர் பந்து கிரிக்கெட்டையும் குடும்பத்தையும் மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதில் மறைந்த நடிகர் விஜயகாந்த் குறித்த காட்சிகள், இளையராஜ பாடல்கள், அட்டகத்தி தினேஷ் கதாபாத்திரம் என வரவேற்பைப் பெறக்கூடிய விஷயங்கள் இடம் பெற்றிருந்தன.

தனது உடல் எடையை 90ஸ் நடிகை மந்த்ரா இப்படி தான் குறைத்தாரா? அவரே கூறிய விஷயம்

ஓடிடி ரிலீஸ்

ரூ. 8 கோடி பட்ஜெட்டிற்குள் உருவான இப்படம் இதுவரை ரூ. 38 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளில் நல்ல வசூல் வேட்டை நடத்தும் இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி சிம்பிளி சௌத் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது திரையரங்கிலேயே லப்பர் பந்து படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகிறது என்றும் பிறகு தேதி அறிவிக்கப்படும் என இப்படத்தை வாங்கிய சிம்பிளி சௌத் தங்களது பக்கத்தில் தெரிவித்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version