Home ஏனையவை ஜோதிடம் ஏப்ரலில் தொழில் – பண முன்னேற்றம் காணப்போகும் அதிஷ்டமான 5 ராசிகள் !

ஏப்ரலில் தொழில் – பண முன்னேற்றம் காணப்போகும் அதிஷ்டமான 5 ராசிகள் !

0

தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகின்ற நிலையில் ஏப்ரல் பத்தாம் திகதி குரு பகவான் மிருகசீரிஷ நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.

இந்த மிருகசீரிஷ நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய், இந்த செவ்வாய் வலிமை, வீரம், துணிச்சல் மற்றும் தைரியம் ஆகியவற்றின் காரணியாவார்.

செவ்வாயின் நட்சத்திரத்திற்கு குரு பகவான் செல்வதால், அதன் தாக்கம் ஒருவரது நிதி நிலை, தொழில் மற்றும் சொத்து ஆகியவற்றில் காணப்படுவதனால் அதில் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கலாம்.

இப்போது குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்பதிவில் காணலாம்.

01. மேஷம்

  1.  குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படக்கூடும்.
  2. அதுவும் தொழிலில் முதலீடுகளை செய்தால் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
  3. வங்கி இருப்பு அதிகரிக்கும்.
  4. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  5. மார்கெட்டிங், வணிகம், ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
  6. வணிகர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.
  7. குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  8. வீட்டின் சூழ்நிலை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.  

02. ரிஷபம்

  1. குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
  2. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.
  3. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
  4. வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும்.
  5. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  6. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
  7. நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.  

03. சிம்மம்

  1. குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உயரங்களை தொடுவார்கள்.
  2. அரசு வேலைக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.
  3. வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  4. இது நிதி நிலையை வலுப்படுத்தும்.
  5. பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  6. அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
  7. சொத்து தொடர்பான விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  8. முதலீடுகளை செய்திருந்தால் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  9. புதிய வீடு அல்லது வாகனம் வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த காலம் சாதகமாக இருக்கும்.  

04. துலாம்

  1. குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
  2. வெளிநாட்டில் படிக்க விரும்பும் அல்லது வேலை செய்ய விரும்புபவர்களின் ஆசை நிறைவேறும்.
  3. தொழிலில் நல்ல மாற்றங்களைக் காணக்கூடும்.
  4. புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது.
  5. புதிய தொழிலில் முதலீடு செய்ய நினைத்தால் இக்காலம் சாதகமாக இருக்கும்.
  6. திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  7. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.  

05. மகரம்

  1. குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசியைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
  2. தொழிலதிபர்கள் இக்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
  3. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  4. ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்கள் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவார்கள்.
  5. திருமணமாகி குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புள்ளது.  

NO COMMENTS

Exit mobile version