Home இலங்கை சமூகம் இலங்கை வானில் தென்படும் சிவப்பு நிலா.. ஆவலுடன் பார்வையிடும் மக்கள்

இலங்கை வானில் தென்படும் சிவப்பு நிலா.. ஆவலுடன் பார்வையிடும் மக்கள்

0

இலங்கையின் பல இடங்களில் நிலா சிவப்பு நிறத்தில் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனை பல மக்கள் பார்வையிடுவதாகவும் அவர்கள் சந்திரனை புகைப்படம் எடுத்தும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் தெரியும் முழு சந்திர கிரகணம் இன்று (07.09.2025) நிகழும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் பிரிவு தெரிவித்திருந்தது. 

சந்திர கிரகணம் 

அதன்படி, இன்றிரவு 8.58 மணி முதல் நாளை (08) அதிகாலை 2.25 மணி வரை, 5 மணி நேரம் 27 நிமிடங்கள் இந்த சந்திர கிரகணத்தைக் காண ஒரு அரிய வாய்ப்பு கிடைக்கும் எனவும் கூறப்பட்டது. 

அந்தவகையில், தற்போது வானில் சந்திரகிரகணம் இடம்பெற்று வரும் நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் அதனை பார்வையிட்டு வருகின்றனர். 

மேலும், இந்த சந்திர கிரகணம் உலக மக்களுக்கு சுமார் 85 சதவீதம் முழுமையான அல்லது பகுதி கிரகணமாகத் தெரியும் என தெரிவிக்கப்பட்டிருந்நது. 

அதன்படியே கட்டாரிலும் இந்த சிவப்பு நிலா தென்பட்டதாக சிலர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version