Home சினிமா மதகஜராஜா படத்திற்காக சுந்தர் சி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

மதகஜராஜா படத்திற்காக சுந்தர் சி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

0

மதகஜராஜா 

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

13 வருடங்கள் கழித்து வெளிவந்தாலும் கூட மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. விஷால், சந்தானம், வரலக்ஷ்மி சரத்குமார், அஞ்சலி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

மேலும், மறைந்த நடிகர்கள் மணிவண்ணன் மற்றும் மனோபாலாவை மீண்டும் திரையில் காணும் வாய்ப்பு கிடைத்தது.

சுந்தர் சி  சம்பளம்

இந்த நிலையில், இப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் சுந்தர் சி வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்காக இயக்குநர் சுந்தர் சி ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

 

Source: https://cineulagam.com/article/madha-gaja-raja-sundar-c-salary-1737010332

NO COMMENTS

Exit mobile version