Home இலங்கை சமூகம் திருமண வீட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு இன்று இரவு ஏற்பட்ட நிலை : பலர் படுகாயம்

திருமண வீட்டிற்கு சென்று வந்தவர்களுக்கு இன்று இரவு ஏற்பட்ட நிலை : பலர் படுகாயம்

0

இன்று (19) இரவு மடோல்சிம பிடமருவ வீதியின் பொல்வத்த பிரதேசத்தில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி அணையில் மோதியதில் 8 பேர் படுகாயமடைந்து மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை(badulla) போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக மடோல்சிம காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா (nuwara eliya)பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

 திருமண வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தவேளை சம்பவம்

மடோல்சிம பிடமருவ பிரதேசத்தில் உள்ள உறவினர் வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டுவிட்டு வானில் நுவரெலியா நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

இந்த விபத்தில் வானின் சாரதி சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும், விபத்தின் போது வானில் 12 பேர் பயணித்ததாகவும், அவர்களில் நால்வர் காயமின்றி தப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினர் மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.   

(images lankadeepa)

Source: https://ibctamil.com/article/madolsima-accident-sends-eight-to-hospital-1729362139

NO COMMENTS

Exit mobile version