Home முக்கியச் செய்திகள் முல்லைத்தீவில் நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீடு

முல்லைத்தீவில் நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீடு

0

முல்லைத்தீவில் நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீடு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu) – முல்லைக் கல்வி நிலைய நிர்வாகி தேவராசா தேவசாந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) பங்கேற்றுள்ளார்.

சஞ்சிகை வெளியீடு

நிகழ்வில் விருந்தினர்களது உரைகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து நித்தம் மாத சஞ்சிகையின் வைகாசி மாத இதழ் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

நித்தம் மாதசஞ்சிகையின் பிரதம ஆசிரியர் நாராயணமூர்த்தி நகுலேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நித்தம் மாதசஞ்சிகையின் வைகாசி மாத இதழின் முதற்பிரதியைக் கையளித்துள்ளார்.

இதனைதொடர்ந்து துரைராசா ரவிகரனால் கல்வி நிலைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் சஞ்சிகையின் ஏனைய பிரதிகள் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version