Home இலங்கை சமூகம் யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் மர்மங்கள்: பார்வையிட்ட நீதவான்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் மர்மங்கள்: பார்வையிட்ட நீதவான்!

0

யாழ்ப்பாணம் (Jaffna) – செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள மனிதப்
புதைகுழியை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஆனந்தராஜா பார்வையிட்டுள்ளார். 

இன்றையதினம் அவர், செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்திற்கு சென்றுள்ளார். 

பகுப்பாய்வு

இதன்போது, அந்த எச்சங்கள் மனித எச்சங்களா என கண்டுபிடிப்பதற்கு, குறித்த பகுதியில்
இருந்த எச்சங்கள் சேகரிக்கப்பட்டு விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளன. 

அத்துடன், அந்த பகுதியை சோதனை செய்யுமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.

அப்பகுதியில் 2011ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் இராணுவ முகாம்
அமைக்கப்பட்டு அங்கு இராணுவத்தினர் அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்த கள விஜயத்தில், சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையா, நல்லூர் பிரதேச செயலர், யாழ். மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ். தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸார் முறைப்பாட்டாளர் மற்றும் பலர் உடனிருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version