Home சினிமா தமிழ்நாட்டை தொடர்ந்து சீனாவில் வசூல் வேட்டைக்கு தயாரான விஜய் சேதுபதியின் மகாராஜா.. இத்தனை திரைகளில் ரிலீஸ்...

தமிழ்நாட்டை தொடர்ந்து சீனாவில் வசூல் வேட்டைக்கு தயாரான விஜய் சேதுபதியின் மகாராஜா.. இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா?

0

மகாராஜா படம்

நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜுன் 14ம் தேதி வெளியாகி இருந்த திரைப்படம் மகாராஜா.

இதில் விஜய் சேதுபதியை அடுத்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விஷயங்களை பேசிய இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றி கண்டது. அதோடு திரையரங்குகளை தாண்டி ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் டிரெண்டிங்கிலேயே இருந்தது.

சீனாவில் ரிலீஸ்

தற்போது என்ன தகவல் என்றால் வரும் நவம்பர் 29ம் தேதி சீனாவில் இப்படம் வெளியாக இருக்கிறதாம். 40000 ஸ்கிரீன்களுக்கும் அதிகமாக மகாராஜா ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது. 

Source: https://cineulagam.com/article/maharaja-movie-mass-opening-in-china-1732087859

NO COMMENTS

Exit mobile version