Home இலங்கை சமூகம் அபாயகரமான நிலையில் மாவிலாறு மடை – அணைக்கட்டு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அபாயகரமான நிலையில் மாவிலாறு மடை – அணைக்கட்டு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாட்டில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக மாவிலாறு மடை மற்றும் அணைக்கட்டு (Bund) ஆகியன தற்போது அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.

மஹாவலி கங்கையின் ஆற்றுப்படுகையில் தாங்க முடியாத அளவுக்கு அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளதாலும் அந்த பகுதியில் பெய்த மழையினாலும் அணைக்கட்டையும் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஒரே அணைக்கட்டு போல காட்சியளிக்கின்றன.

தேவையான நடவடிக்கை

இதனால் அணைக்கட்டும் உடையும் என எதிர்பார்க்கவில்லை என்றாலும் உடைவதற்கான ஆபத்து இருப்பதாக அவர் எச்சரித்துள்ளார்.

குறித்த பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் அணைக்கட்டை நெருங்க முடியாதுள்ள நிலையில் மாவிலாறு அணைக்கட்டின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருப்பதுடன் இது இரவு நேரம் என்பதால் முடிந்தளவு உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version