Home விளையாட்டு மீண்டும் மும்பை அணியின் தலைமைப்பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான்

மீண்டும் மும்பை அணியின் தலைமைப்பயிற்சியாளராக இலங்கை ஜாம்பவான்

0

வரும் 2025ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்(Mumbai Indians) அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன(Mahela Jaywardene) நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பரும் துடுப்பாட்ட வீரருமான மார்க் பவுச்சர்(Mark Boucher) மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றினார்.

இருப்பினும், அவரது இரண்டு ஆண்டு பதவிக் காலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

கடைசி இடத்தை பிடித்த மும்பை அணி

குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் கடைசி (10) இடத்தையே பிடித்தது.

மஹேலவின் காலத்தில் அணி படைத்த சாதனை

ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியான மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.

மஹேல ஜயவர்தன தலைமைப் பயிற்றுவிப்பாளராக இருந்த 2017-2022 காலப்பகுதியில் மும்பை அணி மூன்று தடவைகளிலும் சம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version