முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) நீக்கப்பட்ட தனது பாதுகாப்பை கோரி உயர் நீதிமன்றில் அடிப்பமை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் குழு பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, மகிந்த ராஜபக்ச தனது சட்டத்தரணிகள் மூலம் தாக்கல் செய்த மனுவில், “முறையான பாதுகாப்பு மதிப்பீடு இல்லாமல், அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட பாதுகாப்புக் காவலர் குழுவிலிருந்து 60 அதிகாரிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டனர் என்றும், மற்ற அனைவரும் நீக்கப்பட்டனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பயங்கரவாத அச்சுறுத்தல்

அத்தோடு, தற்போது தனது பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வீரர்கள் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த | Mahinda Files A Petition To The Supreme Court

அதேவேளை, சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்த தாம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதாகவும், தனது உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் கோரிக்கை

இதன்படி, பிரதிவாதிகள் தனது பாதுகாப்பை தன்னிச்சையாக நீக்கியதன் மூலம் தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு மனுதாரரான மகிந்த நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

அநுர தரப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய மகிந்த | Mahinda Files A Petition To The Supreme Court

மேலும், தனக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்யவும் நீக்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் திருப்பித் தருமாறும் பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மகிந்த ராஜபக்ச உயர் நீதிமன்றத்தை கோரியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்