Home இலங்கை அரசியல் மீண்டும் பலப்படுத்தப்படும் மகிந்தவின் பாதுகாப்பு…! வெளியான தகவல்

மீண்டும் பலப்படுத்தப்படும் மகிந்தவின் பாதுகாப்பு…! வெளியான தகவல்

0

பாதுகாப்பு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் புத்திக்க மனதுங்க தெரிவித்துள்ளார். 

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல்

மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்கு ஐ.எஸ் அமைப்பு மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக சிறீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கூறிவருகிறது.

இதேவேளை, நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் மற்றும் அரசின் மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட மீளாய்வு செய்யவோ அல்லது குறைக்கப்படுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version