அரசியலில் இருந்து விடைபெறுவதற்கு பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென மகிந்தவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அரசியலில் ஓய்வு பெறும் மகிந்த
உடல்நிலை மற்றும் அரசியலில் ஈடுபடுவதற்காக நாடு முழுவதும் பயணம் செய்வதால் ஏற்படும் அசௌகரியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்காக அவர் தொடர்ந்து பாடுபடுவார் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.