Home இலங்கை சமூகம் கடூழிய சிறைத்தண்டனைகளும் காப்பாற்றப்படும் பாரதூரமான குற்றவாளிகளும்

கடூழிய சிறைத்தண்டனைகளும் காப்பாற்றப்படும் பாரதூரமான குற்றவாளிகளும்

0

நேற்றைய நாளில் சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு இருபதுக்கு அதிகமான ஆண்டுகள் கடூழியச்சிறை தண்டனை விதிக்கப்பட்ட விடயம் பரவலாகப் பேசப்பட்டது.

ஆனால் இந்த தீர்ப்பு உண்மைக்கும் நீதிக்குமான ஒரு தீர்ப்புதான அல்லது கடந்த காலங்களைபோல அரசியல் பழிவாங்கலா இப்படி நிறைய கேள்விகள் எழுகிறது. 

ஏன் இந்த கேள்விகள் எழுப்ப்படுகிறது என்றால் இலங்கை என்ற நாடும் அதன் அதிகார முகங்களும் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தியவர்களை உயர் பாதுகாப்பிற்குள்ளோ அல்லது ராஜதந்திர பாதுகாப்பினையோ வழங்குவது முன்னை ஜனதாபதி காலத்திலும் உண்டு.

ஆகவேதான் இந்த நகர்வின் மீது மிகப்பெரும் கேள்விகள் எழுகிறது கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்து வசந்த கர்ணாகொட வரை இந்தமாதிரியான ஒரு அனுபவம் ஈழத்தமிழர்களுக்கு உண்டு.

இந்ந நிலையில் தான் மூன்று தசாப்தங்களுக்கு முன் இத்தாலய விமானத்தை கடத்தி கப்பம் கோரிய ஒருவரை ஜய வேவா என்று வரவேற்றது சிங்கள சமூகம்.

எனவேதான் இப்போதும் அன்று போல் தான் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சில பதிவகளை வைத்து முழுமையாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு.

https://www.youtube.com/embed/57_-Jd3rnPQ

NO COMMENTS

Exit mobile version