முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பேன் என்று பதவிக்கு வந்தவர்தான் மைத்திரிபால சிறிசேன!

“நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிப்பேன் என்று சொல்லி வந்தவர் தான் மைத்திரிபால சிறிசேன  ஆனால் இன்று அவர் சொல்கிறார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்க வேண்டும்” என்று என நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மௌலானா தெரிவித்தார்.

இன்றைய தினம்(13) மட்டக்களப்பு ஏறாவூர் பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பணியாளர்களுக்கு ஊக்குவிப்பு வழங்குதல் மற்றும் தேசிய ரீதியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் விக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்க வேண்டும் என்ற விடயம் தற்போது பிரஸ்தாபிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

நிறைவேற்று அதிகார அதிபர் 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்க வேண்டும் என்றால் நாங்கள் ஆதரவு கொடுக்க தயார் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன கூட கூறியுள்ளார்.

maithiripalasirisena

இவர் கூட நல்லாட்சி காலத்தில் வருகின்ற பொழுது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிப்போம் என்று சொல்லிக் கொண்டுதான் வந்தார்.

நாங்கள் கூட எதிர்பார்த்தோம் நல்லாட்சி அரசாங்கத்தில் குற்றம் செய்தவர்கள், ஊழல் செய்தவர்களை சிறையில் அடைப்பார்கள் என்று. நாங்கள் கூட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தோம்.

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!

அமெரிக்க குடியுரிமை பெறுவதில் முதலிடம் பிடித்த நாடு எது தெரியுமா!

மைத்திரிபால சிறிசேன

ஆனால் அவர்கள் முற்றாக அதனை செய்யவில்லை.நாடாளுமன்றம் இடையில் களைக்கப்பட்டது.

இன்று சொல்கிறார் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிப்பதற்கான பெருபான்மை தங்களிடம் உள்ளதாக.

இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறைமையால் சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த காலங்களும் உண்டு ஆனால் அவையெல்லாம் நடக்காமல் போனது.

srilanka parliment

எனவே இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறை இருந்தால் என்ன இல்லாமல் போனால் என்ன என்ற நிலை தற்போது உருவாகிவிட்டது.

ஏற்கனவே அதிபர் முறையை ஒழிப்பேன் என்று சொன்னவர்கள் அப்போது அதை செய்யாது இன்று வந்து சொல்கின்றனர்.
எனவே யாரை நம்புவது என்ற நிலையில் தான் நாங்கள் உள்ளோம்” என்றார்.

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

விவசாயிகளுக்கு மற்றுமொரு மகிழ்ச்சித் தகவல்! இலவச இழப்பீடு தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்