Home இலங்கை சமூகம் இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

இலங்கையில் திருத்தப்படவுள்ள முக்கிய அரச கட்டடங்கள்

0

இலங்கையின் மிகவும் முக்கியமான மூன்று அரச கட்டடங்களுக்கு, திருத்தப்பணிகள்
அவசியம் என கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற வளாகம், காலி முகத்திடலில் உள்ள
பழைய நாடாளுமன்ற கட்டடம் அதாவது தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் கொழும்பு
7 இல் உள்ள சுதந்திர சதுக்கம் என்பனவே அவையாகும்.

முக்கிய அரச கட்டிடங்கள்

இந்த கட்டடங்களுக்கு, பராமரிப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள்
தேவைப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான அதிகாரிகள், ஏற்கனவே மதிப்பீடு மற்றும் வடிவமைப்பு அறிக்கைகளை
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சமர்ப்பித்துள்ளனர்,

இதன்படி, நாடாளுமன்ற வளாகத்தை மட்டும் புதுப்பிப்பதற்கு சுமார் 10 பில்லியன்
ரூபாய் செலவாகும் என்று மதிப்பிட்டுள்ளது.

கூரையில் நீர் கசிவு காரணமாக நாடாளுமன்ற கட்டிட சுவர்கள் மற்றும் தூண்களில்
விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து ஆண்டுகளுக்குள், கட்டம் கட்டமாக, மேற்கொள்ளும் வகையில், புதுப்பிக்கும்
திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version