Home விளையாட்டு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் பிரபலம் விடுத்த வேண்டுகோள்

இலங்கை கிரிக்கெட் ரசிகர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் பிரபலம் விடுத்த வேண்டுகோள்

0

இலங்கையின் ஆடவர் அணிக்கு தொடர்ந்து ஆதரவளித்து அவர்களுக்கு பலமாக இருக்குமாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க (Lasith Malinga) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது உத்தயோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அணியை விமர்சிப்பது மாத்திரம் அதனை மேம்படுத்த உதவாது எனவும்இலங்கை அணி சிறப்பாக செயல்படவில்லை என்ற அடிப்படையில் பொதுமக்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கான ஆதரவில் இருந்து விலகிச்செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு வலியுறுத்து

குறிப்பாக, இந்திய (India) அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள போட்டிகளை பார்ப்பதற்கு செல்வதை தவிர்க்க வேண்டாம் என்றும், போட்டிகளை புறக்கணிக்க வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, பயிற்சியாளர் யாராக இருந்தாலும், இறுதியில், போட்டியின் வெற்றியை பொறுத்த வரையில், அது களத்தில் இருக்கும் வீரர்களை சார்ந்தது.

இந்த நிலையில், கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான தீர்வை பார்க்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளது என்றும் மலிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version