Home இலங்கை குற்றம் கட்டுநாயக்கவில் சி.ஐ.டியினரால் நபரொருவர் கைது !

கட்டுநாயக்கவில் சி.ஐ.டியினரால் நபரொருவர் கைது !

0

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம் (9) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர், கொழும்பு- குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.

மேலதிக விசாரணை

சந்தேக நபர் நேற்று காலை துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்ற போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபர் கொண்டுவந்த பயணப்பொதிகளிலிருந்து 35 மடிக்கணினிகள், 3 கணினிகள், 10 ஐ போன்கள், 100 சிம் கார்டுகள் மற்றும் ஒரு தொகை காலணிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

Source: https://tamilwin.com/article/man-arrested-in-katunayake-1744287237

NO COMMENTS

Exit mobile version