வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட முதலி கோவில் பகுதியில் வைத்து வாளுடன் கைது
செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (07.12.2025) வாளுடன், வட்டுக்கோட்டை காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை காவல்துறையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
