Home இலங்கை குற்றம் மனைவியை பயன்படுத்தி கணவன் செய்த மோசமான செயல் – வீதிகளில் சிக்கிய பலர்

மனைவியை பயன்படுத்தி கணவன் செய்த மோசமான செயல் – வீதிகளில் சிக்கிய பலர்

0

தனது மனைவியை தகாத முறையில் பயன்படுத்தி, பலரை அச்சுறுத்தி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான கணவனை, மேல் மாகாண குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

30 வயதான சந்தேக நபர் கோட்டேகொட பகுதியை சேர்ந்தவர் எனவும் அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தகாத நடவடிக்கை

சந்தேக நபர் கடந்த 23 ஆம் திகதி பேலியகொட சந்தியில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டபோது அவரிடம் 10 கிராம் 400 மில்லிகிராம் ஹெராயின் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தனது மனைவியை வீதிகளில் தகாத நடவடிக்கைக்கு உட்படுத்தி பலரை தன்வசப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version