கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தட்டுவன்கொட்டி பகுதியில் வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தட்டுவன்கொட்டி பகுதியில் கடந்த (29) ஆம் திகதி வெடிபொருளை வெட்டி மருந்து எடுத்த வேளை வெடிபொருள் வெடித்ததில் இருவர் காயமடைந்தனர்.
உயிரிழப்பு
இதன்போது, குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்
கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரே படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிளிநொச்சி
மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில், 50 வயதுடைய சோமசுந்தரம் கேதீஸ்வரன் என்ற கொடிகாமம் பகுதியைச்
சேர்ந்த குடும்பஸ்தரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
