யாழில் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்ற நபர் ஒருவர் திடீரென மயங்கி
விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று(21) மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த
சின்னையா பிரேமந் (வயது 58) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் நேற்று மதியம் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்த போது
கடைக்கு முன்னாலே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
