Home இலங்கை சமூகம் யாழில் கோர விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி

யாழில் கோர விபத்தில் சிக்கி இளம் குடும்பஸ்தர் பலி

0

யாழில் உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் யாழ். (Jaffna) நெடுந்தீவு பகுதியில் நேற்று (24.02.2025) இரவு இடம்பெற்றுள்ளது.

விபத்தில் நெடுந்தீவைச்
சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்த போது பிரதேச
வைத்தியசாலையினை அண்டியுள்ள மதவடியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து
இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், விபத்து தொடர்பில் நெடுந்தீவு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள் – பிரதீபன்

You May Like this


https://www.youtube.com/embed/zRrdBTAkKvs

NO COMMENTS

Exit mobile version