முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருத்துவ வரலாற்றில் புதிய உச்சம்! மனிதனுக்கு பன்றி இதயம் பொருத்தி சாதனை (காணொளி)

வைத்தியத்துறை வரலாற்றில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்தி அமெரிக்கா வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் (வயது – 57) என்ற நபரிற்கே இவ்வாறு இதயம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவரே பன்றி இதயம் பொருத்தப்பட்ட உலகின் முதல் நபர் ஆவார்.

இது தொடர்பில் தெரியவருகையில்,

டேவிட் பென்னடிற்கு உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம் பொருத்த வேண்டியிருந்தது. ஆனால் மருத்துவ காரணங்களால், மனித இதயம் பொருத்தப்படுவதற்கு அவர் தகுதியற்றவராக இருந்தார்.

இதன் காரணமாக அவரைக் காப்பாற்ற இறுதி முயற்சியாக அவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்த வைத்தியர்கள் முடிவு செய்தனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், புத்தாண்டின் போது அனுமதியளித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமையன்று அறுவை சிகிச்சை மூலம் வைத்தியர்கள் பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர். தற்போது வைத்தியர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இவரிற்கு பொருத்தப்பட்ட இதயம் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் உடலிலிருந்து எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பன்றியின் உறுப்புகளை மனித உடம்பு ஏற்காமல் போவதற்கு காரணமாக இருக்கும் மூன்று மரபணுக்களை பன்றியின் உடலிலிருந்து வைத்தியர்கள் நீக்கியுள்ளனர்.

பன்றியின் இதய திசுவை (Heart Tissue) தேவைக்கு மேல் வளர செய்யும் மரபணுவையும் மருத்துவர்கள் நீக்கியுள்ளதோடு, பன்றியின் உறுப்பை மனித உடல் ஏற்பதற்காக, ஆறு மனித மரபணுக்களை பன்றியின் உடலில் செலுத்திய பின்னர் குறித்த பன்றியின் இதயத்தினை அவருக்கு பொருத்தியுள்ளனர்.

கடந்தாண்டு அமெரிக்காவில், மூளை சாவடைந்த ஒருவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதித்திருந்தனர்.

தற்போது அதே நாட்டை சேர்ந்த வைத்தியர்கள் ஒருபடி மேலே சென்று, சுயநினைவுடன் இருக்கும் மனிதனுக்கு பன்றியின் இதயத்தை பொருத்தியுள்ளனர்.

மனிதனுக்கு பன்றியின் இதயம் பொருத்தப்பட்டது வெற்றியடைந்தால், அது மனித உடல் உறுப்புக்களுக்கான தட்டுப்பாட்டை போக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் அறுவை சிகிச்சை நிபுணர் பார்ட்லி க்ரிபித் (Bartley Griffith) தெரிவிக்கையில், 

மாற்று உறுப்பு பற்றாக்குறை நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இதுபோன்ற சாதனைகள் பயன்படும்.
அமெரிக்காவில் ஒரு நாளைக்கு 17 பேர் மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.

தேவையை பூர்த்தி செய்ய விலங்கு உறுப்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறு நீண்ட காலமாக கருதப்படுகிறது, மேலும் பன்றி இதய வால்வுகளைப் பயன்படுத்துவது ஏற்கனவே பொதுவானது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/3VqxtG_7DIM

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்