Home இலங்கை குற்றம் இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபர்

இளம் பெண்ணை கொடூரமாக கொலை செய்த நபர்

0

குருணாகல், குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் கலஹிட்டியாவ பகுதியில் நேற்று பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் ஏகல பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் கைது

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழ்ந்தவர் சந்தேக நபருடன் சுமார் 4 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும், வாக்குவாதம் அதிகரித்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

NO COMMENTS

Exit mobile version