Home இலங்கை குற்றம் தமிழர் பகுதியில் நபர் உறவினரை தாக்கி கொலை செய்த நபர் தப்பியோட்டம்

தமிழர் பகுதியில் நபர் உறவினரை தாக்கி கொலை செய்த நபர் தப்பியோட்டம்

0

மட்டு. கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வயல் பகுதி ஒன்றில் வேளாண்மை
காவலுக்கு சென்ற நபரை அவரின் மச்சான் கோடரியால் தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளார். 

சந்தேகநபர், குடும்ப தகராறு காரணமாக இருவருக்குள் ஏற்பட்ட வாய்
தர்க்கத்தையடுத்து மச்சான் மீது கோடரியால்
தாக்கியுள்ளார். 

விசாரணைகள் ஆரம்பம்  

இந்நிலையில், அந்த நபர் உயிரிழந்துள்ள நிலையில் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து அங்கு பொலிஸ் தடவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்டு
விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

அத்துடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில்
ஒப்படைப்பற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

NO COMMENTS

Exit mobile version