Home இலங்கை குற்றம் விருந்தினால் ஏற்பட்ட விபரீதம் – வீடொன்றுக்குள் கொலை செய்யப்பட்ட இளைஞன்

விருந்தினால் ஏற்பட்ட விபரீதம் – வீடொன்றுக்குள் கொலை செய்யப்பட்ட இளைஞன்

0

புத்தளத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்தவர்களால், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சாலியவெவ, யாய 07 பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 வயதான நபர் உயிரிழந்துள்ள நிலையில், 23 மற்றும் 24 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபான விருந்து

நேற்று முன்தினம் இடம்பெற்ற மதுபான விருந்து ஒன்றில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாலியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Source: https://tamilwin.com/article/man-killed-in-puttalam-yesterday-night-party-1731763716

NO COMMENTS

Exit mobile version