Home இலங்கை சமூகம் வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வாய்க்காலில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0

கிளிநொச்சி – கணேசபுரம் முனியப்பர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வாய்க்காலில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அவர் பயணித்த மோட்டார்சைக்கிளும் வாய்க்காலில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விசாரணை முன்னெடுப்பு 

கிளிநொச்சி – ஜெயந்தி நகரைச் சேர்ந்த சோமு கஜேந்திரமூர்த்தி (37 வயது) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக
கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version