Home இலங்கை குற்றம் இயக்கச்சி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இயக்கச்சி பகுதியில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

0

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20) விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக சட்ட நடவடிக்கை

கைது செய்யப்பட்டவர் வடமராட்சி- கிழக்கு கட்டைக்காடு
பகுதியைச் சேர்ந்தவராவார்.

அத்துடன் சந்தேகநபரிடமிருந்து 5.660kg கேரளா கஞ்சா
கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டவர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 4 Evening

Source: https://tamilwin.com/article/man-was-arrested-with-kerala-ganja-in-kilinochchi-1740067172

NO COMMENTS

Exit mobile version