ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலின் சூத்திரதாரி இனம் காணப்பட்டுள்ளார். இதன்படி காஷ்மீரை சேர்ந்த ஆதில் அகமது தோகர் தான் மூளையாக செயல்பட்டவர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இவர் பாகிஸ்தானில் ஆறு ஆண்டுகளாக வசித்த நிலையில், 2018ல் மூன்று முதல் நான்கு பயங்கரவாதிகளுடன் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
காஷ்மீரை சேர்ந்தவர்
இவர் காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குர்ரே என்ற சிறிய கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்.
2018ம் ஆண்டு மாணவர் விசா மூலம் இவர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.பாகிஸ்தானில் மாயமான ஆதில் அகமது தோகர் பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்து ஆயுத பயிற்சி மேற்கொண்டார்.