Home இலங்கை சமூகம் தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன்

தொடருந்து விபத்தை தடுத்த பொதுமகன்

0

மொரட்டுவையை சேர்ந்த ஒருவர், இன்று காலை கடற்கரை தொடருந்து பாதையில்
ஏற்படவிருந்த விபத்தை தடுக்க உதவியுள்ளார்.

தண்டவாளம் உடைந்திருப்பதை, அவதானித்த அவர், எச்சரித்ததன் மூலம் விபத்தை
தடுத்துள்ளார்.

சமந்த பெர்னாண்டோ என்ற பொதுமகனே இந்த விபத்தை தடுத்துள்ளார்.

அபாய நிலை

குறித்த தொடருந்து, அபாய நிலையை அடைவதற்கு முன், பிரகாசமான ஆடையை அசைத்து,
தொடருந்தை நிறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக,பாணந்துறைக்கும் மொரட்டுவைக்கும் இடையிலான தொடருந்து
சேவைகள் சிறிது நேரம் இடைநிறுத்தப்பட்டன.

NO COMMENTS

Exit mobile version