Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்

தமிழர் பகுதியிலுள்ள ஆலயமொன்றில் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போன மாம்பழம்

0

கிளிநொச்சி- இராமநாதபுரம் திருவருள்
மிகு வயலூர்முருகன் ஆலய மாம்பழ திருவிழாவின் போது வைக்கப்பட்ட ஞானப்பழம் பல இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.

குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகின்ற நிலையில் ஆறாம் நாளான மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஏல விற்பனை

இதன்போது, சுப்பிரமணியம் ஜெயாபரன் எனும் அடியவர் ஆறு இலட்சத்து நாற்பத்தையாயிரம் ரூபாவிற்கு (645,000/-)  இந்த மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

இந்தநிலையில், ஏல விற்பனையை சிறப்பாக நடாத்திய ஆலய மகோற்சவ பிரதம குருவிற்கும், வயலூரான்
இந்து இளைஞர் மன்றத்தினருக்கும் ஏலவிற்பனையில் கலந்து கொண்ட அடியார்களுக்கும் ஆலய நிர்வாகம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.

NO COMMENTS

Exit mobile version