Home இலங்கை சமூகம் மன்னார் காற்றாலை திட்டம்: புலம்பெயர் பறவைகள் தொடர்பில் ஆய்வு!

மன்னார் காற்றாலை திட்டம்: புலம்பெயர் பறவைகள் தொடர்பில் ஆய்வு!

0

அதானி குழுமத்தால் கைவிடப்பட்ட மன்னார் காற்றாலை திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன் புலம்பெயர் பறவைகள் தொடர்பில் ஆழமான ஆய்வை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த ஆய்வுக்காக குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் எனவும் தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வு, குறித்த பகுதியில் புலம்பெயர்ந்த பறவைகளின் வடிவங்கள் மற்றும் வாழ்விடங்களை ஆய்வு செய்யும் எனவும் இது புலம்பெயர்ந்த பறவைகள் மீதான தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் உத்தி

தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பின்னர், அத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த ஒரு முதலீட்டாளரைத் தேர்ந்தெடுப்பதே தற்போதைய அரசாங்கத்தின் உத்தியாக கையாளப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version