கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அரசுக்குச் சொந்தமான ஏராளம் சொகுசு வாகனங்கள் கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு – 07இல் அமைந்துள்ள சிராவஸ்தி மாளிகையில் கைவிடப்பட்ட நிலையில் அரசாங்கத்துக்குக் சொந்தமான ஏராளம் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்கும் விடுதி
ஆடம்பர பீ.எம்.டப்ளியூ கார்கள் தொடக்கம் மொண்டரோ உள்ளிட்ட பல்வேறு சொகுசு வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் அங்கு, துருப்பிடித்தும் சிதிலமடைந்தும் காணப்படுகின்றன.
சிராவஸ்தி மாளிகையை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தங்கு விடுதியாக பயன்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாளிகை முன்னைய காலத்தில் மேல் மாகாண சபையின் பிரதான அலுவலகமாக பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.