Home இலங்கை சமூகம் அறுகம்பை தொடர்பில் மேலும் பல நாடுகள் எச்சரிக்கை

அறுகம்பை தொடர்பில் மேலும் பல நாடுகள் எச்சரிக்கை

0

அறுகம்பை சுற்றுலா பகுதி தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து பல நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனைகளை புதுப்பித்துள்ளன.

பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகியன ஏற்கனவே தங்கள் நாட்டுப் பிரஜைகளை இது தொடர்பில எச்சரித்து அறிவுறுத்தல் விடுத்துள்ள நிலையில், தற்போது நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தமது நாட்டு பிரஜைகளை பாதுகாப்பு மற்றும் அவதானத்துடன் இருக்குமாறு அந்த நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.

அறுகம்பையில் உள்ள சுற்றுலாத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பகரமான தகவல் கிடைத்துள்ளதால், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம்  தமது பிரஜைகளை அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,  அதிகளவிலான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர்  பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்தார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் நிஹால் தல்துவ வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version