Home முக்கியச் செய்திகள் அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

0

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

த.சத்தியமூர்த்தியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவிலேயே மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை

குறித்த பதிவில் “இன்று காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT scan பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர்.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினறுமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/M7YliJP9hHk

NO COMMENTS

Exit mobile version