Home இலங்கை சமூகம் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

0

Courtesy: thavaseelan

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய 2025 ஆம்
ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை அனுஷ்டிக்கும் வகையில் சிரமதான
பணிகள் இன்று(16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது

மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை
தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

சிரமதான பணிக்கு அழைப்பு

 அளம்பில் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில்
உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதான
பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல்
நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறும் பணிக்குழுவினர்
கோரிக்கை விடுத்துள்ளனர்

 

NO COMMENTS

Exit mobile version