Home இலங்கை சமூகம் யாழ் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அசைவ உணகவம்! தவறிழைத்துள்ள யாழ் மாநகரசபை

யாழ் நல்லூர் ஆலய வளாகத்திற்குள் அசைவ உணகவம்! தவறிழைத்துள்ள யாழ் மாநகரசபை

0

 யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்திற்குள் அசைவ உணகவமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமையானது தமிழர் பிரதேசங்களில் அண்மை காலங்களில் பிரதேசங்களில் பேசுபொருளாகியிருந்தது.

அதனை தொடர்ந்து இடம்பெற்ற போராட்டங்களை தொடர்ந்து அசைவ உணவகம் தற்போது சைவ உணவகமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த கடைக்குரிய கட்டடம் ஒரு வீட்டு மனை கட்டுவதற்காக யாழ் மாநகரசபையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாண மாநகரசபையினுடைய முன்னாள் உறுப்பினர்
வரதராசா பார்த்திபன் தெரிவித்தார்.

எமது ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“ஆனால் அந்த வேலைகள் இடைநிறுத்தப்பட்டு நான்கு மாதங்களுக்குள் இந்த உணவகம் கட்டப்பட்டுள்ளது.

தற்போது இந்த விடயம் பெரிதாகாமல் தடுக்கப்பட்டுள்ளது.

எனினும் யாழ்.மாநகரசபை இந்த விடயத்தில் தவறிழைத்துள்ளது.

அதாவது குறித்த உணவகமானது யாழ்.மாநகரசபைக்கு முன்னாள் அமையப்பெற்றுள்ள நிலையில் அங்குள்ள உயரதிகாரிகள் கவனத்தில் எடுத்திருக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவலை கீழுள்ள காணொளியில் காண்க….

NO COMMENTS

Exit mobile version