Home இலங்கை சமூகம் யாழில் வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

யாழில் வீதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

0

யாழ்.BA தம்பி வீதியில் தனியார் வைத்தியசாலை மருத்துவக்கழிவுகள் வீசப்படுவதாக
பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக மாநகரசபை உறுப்பினர்களான
மதுசிகான் சதீஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

அங்கு மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில்
சுகாதர பரிசோதகருக்கும், யாழ்ப்பாணம் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

விசாரணைக்கு அழைப்பு

இந்தநிலையில் பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று நிலைமையை அவதானித்தனர்.

அதன்பின்னர், கழிவுகளை கொட்டிய தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினரை
விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகிறது.

NO COMMENTS

Exit mobile version