தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தந்தை வைத்தியர் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் நேற்று (07) காலமானார்.
அன்னாரின் திருவுடல் இன்று (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect Homeஇல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை (09) மாலை 6.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
