கிளிநொச்சி A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து நேற்றிரவு கிளிநொச்சி (Kilinochchi) – A9 வீதி கனகாம்பிகைக்குளம் பகுதியில் உள்ள சிவன்கோயில் முன்பாக இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார்.
காரின் சாரதி கைது
கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த கார் உள்
வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திரும்பி துவிச்சக்கரவண்டியில் சென்ற குறித்த
முதியவர் மீது மோதியதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
மேலும் சம்பவம்
தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this
https://www.youtube.com/embed/o7I7p2I5PTc
