Home இந்தியா மோடியின் பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

மோடியின் பிறந்த நாளுக்கு பரிசு அனுப்பிய மெஸ்ஸி

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (17) தன்னுடைய 75 வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார்.

உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) பிறந்தநாளை ஒட்டி அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

உலகின் புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரமும், ஆர்ஜென்டீனா அணியின் தலைவருமான லியோனல் மெஸ்ஸி, இவ்வருடத்தின் இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

கையொப்பமிட்ட ஜெர்ஸி

மூன்று நாட்கள் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மெஸ்ஸி டெல்லி, மும்பை, கல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், அவருக்குப் பரிசளிக்கும் விதமாக, தன்னுடைய கையொப்பமிட்ட ஜெர்ஸி ஒன்றையும் மெஸ்ஸி பரிசளித்திருக்கிறார்.   

தனது கையொப்பமிட்ட 2022 ஃபிபா உலகக்கோப்பை அர்ஜென்டினா ஜெர்சியை பிரதமர் மோடிக்கு அவர் பரிசாக வழங்கியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version