Home இலங்கை சமூகம் 3,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ள மெட்டா நிறுவனம்

3,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ள மெட்டா நிறுவனம்

0

உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளங்களான முகப்புத்தகம்(Facebook), இன்ஸ்டாகிராம்(Instagram) ஆகியவற்றை நிர்வகித்து வரும் மெட்டா(Meta) நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, மெட்டா நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை நாளை(09) முதல் தொடங்கவுள்ளதாக என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி, அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் மனிதவள துணைத்தலைவர் ஜெனெல் கேல் வெளியிட்டுள்ளார்.

ஆட்குறைப்பு நடவடிக்கை

தற்போது, மெட்டா நிறுவனத்தில் 72,000 பேர் பணிபுரிகின்ற நிலையில், அதில் குறைந்த செயல் திறன் கொண்ட 5 சதவீத( கிட்டத்தட்ட 3,000) ஊழியர்கள் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அந்தவகையில், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் ஆட்குறைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள் என குறிப்பிடப்படுகின்றது.

எனினும், ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கக் கண்டங்களில் உள்ளோர் இம்மாதம் 11ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை ஆட்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. 

NO COMMENTS

Exit mobile version