இலங்கை இராணுவத்தை அதிகம் கொண்ட பகுதிகளாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் தொடர்ந்து காணப்படுவதாக சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒரு நாட்டில் மக்கள் வாழும் இடத்தில் இராணுவத்தின் பிரசன்னம் அவசியமற்றது மற்றும் சிவில் செயற்பாடுகளுக்குள் இராணுவம் தலையிடக்கூடாது.
இராணுவத்தினருடன் எங்களுக்கு பலத்த பிரச்சினை காணப்படுவதுடன் அவர்களை எதிர்த்து தொடர் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டங்களுக்கே இன்னும் நீதி வழங்கப்படாத பட்சத்தில் தற்போது வரையிலும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுகின்றன” என அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா
https://www.youtube.com/embed/qB4X-0twGMc

