Home இலங்கை சமூகம் வெளிநாடொன்றில் தீப்பற்றி எரிந்த உலங்கு வானூர்தி – ஐவர் பலி

வெளிநாடொன்றில் தீப்பற்றி எரிந்த உலங்கு வானூர்தி – ஐவர் பலி

0

ஆபிரிக்க யூனியன் அமைதிப் படையினரை ஏற்றிச் சென்ற உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சோமாலியா (Somalia) தலைநகர் மொகடிஷுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராணுவ வீரர்கள் எட்டு பேருடன் Mi-24 உலங்குவானூர்தி லோயர் ஷாபெல் பகுதியில் உள்ள ஒரு விமான நிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்தது.  

தரையில் விழுந்து விபத்து

அந்த உலங்குவானூர்தியில் ஆப்பிரிக்க யூனியன் அமைதிப்படையின் இராணுவ வீரர்கள் பயணித்தனர்.

இந்நிலையில், உலங்குவானூர்தி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version