Home ஏனையவை வாழ்க்கைமுறை பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானம்

பால் தேநீரின் விலையை அதிகரிக்க தீர்மானம்

0

பால் தேநீரின் விலையை நிச்சயமாக அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

அதன்படி, ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால் தேநீர் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பால் மா விலை அதிகரிப்பு

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை ஏப்ரல் முதலாம் திகதி முதல் 4.7 வீதத்தால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. 

எனவே, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1100 ரூபாவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version