Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெற்ற மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

யாழில் இடம்பெற்ற மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

0

மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா நேற்று(26.10.2025) யாழில் உள்ள தனியார் விருந்தகம் ஒன்றில் பிரமாண்டமான முறையில் ஆரம்பமாகியுள்ளது.

ஐபிசி தமிழ், பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் பூவன் மதீசன் ஆகியோரது கூட்டு இயக்கத்தில் வெளிவர இருக்கும் மில்லர் திரைப்படம் ஈழ சினிமாவில் புதிய திருப்புமுனைக்கான முயற்சியாக எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய பிரபலங்கள் பங்கேற்பு

இதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் ரகுராம், ”எங்களிடம் கதை இருக்கிறது, கதைக்குரிய களம் இருக்கிறது, அதை வெளிப்படுத்தும் நல்ல கலைஞர்கள் இருக்கிறார்கள்” என்ற காத்திரமான உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார்.

மில்லர் திரைப்படத்தின் இயங்குனர் ராஜ் சிவராஜ், இந்திய பிரபலங்களைப் பார்த்து ”எங்கள் சினிமாவில் நடிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் உங்கள் கலைஞர்கள் இங்கு வரும் நிலையை வெகு சீக்கிரத்தில் உருவாக்குவோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  குறித்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல தென்னிந்திய பிரபலங்களும் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்.

இந்நிலையில், ஐபிசி தமிழ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகும் நான்காவது திரைப்படமாக மில்லர் திரைப்படம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version