முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மயிலிட்டி துறைமுக பிரச்சினைக்கு தீர்வுகாண அமைச்சர் டக்ளஸ் கள விஜயம்

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால்
துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள்
நிரப்புவது போன்ற செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அதற்கு நிரந்தர
தீர்வை பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்(Douglas Devananda) கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த துறைமுகத்தில் தொடர்ந்துவரும் இவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில்
அமைச்சரின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (30.03.2024)
மயிலிட்டி இறங்குதுறைப் பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்ட அவர் நிலைமைகளை ஆராய்ந்துகொண்டார்.

மேலும் மயிலிட்டி இறங்குதுறை பகுதியில் அதிகளவான நீண்டநாள் தொழில்
மேற்கொள்ளும் ரோலார் படகுகளும், மீன்பிடி படகுகளும் தரித்து நிற்பதற்கு
அனுமதிக்கப்பட்டுள்ளது.

420 ரூபாவை அடைந்த டொலர்: இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென வந்த அறிவிப்பு - அமைச்சரின் தகவல்

420 ரூபாவை அடைந்த டொலர்: இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென வந்த அறிவிப்பு – அமைச்சரின் தகவல்

நாளாந்த தொழில் நடவடிக்கை

எனினும் அவை நாளாந்தம் தொழில் நடவடிக்கைகளை மேற்கொளும் படகுகள் எரிபொருள் நிரப்புவதிலும் படகுககளை கரை சேர்ப்பதிலும் பல அசௌகரியங்களை ஏற்படுத்தி வருகின்றன.

minister-douglas-field-visit-myality

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ந்துவருவதால் அவற்றை ஒழுங்கபடுத்தி கடற்றொழில்
நடவடிக்கைகளுக்கு இறங்குதுறையின் செயற்பாடுகளை இலகுபடுத்தி தருமாறு
கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் மயிலிட்டி துறைமுகத்தில் சட்டவிரோதமாக இலங்கை எல்லைக்கள் நுளைந்த
குற்றச்சாட்டில் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்
இந்திய இழுவைப் படகுகளாலும் துறைமுகத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு
வருவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

நாமலுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி - அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

நாமலுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி – அம்பலத்திற்கு வந்த ராஜபக்சர்களின் உள்ளக மோதல்

விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இதன்படி நிலைமைகளை அவதானித்த அமைச்சர் அவ்வாறு தரித்து நிறுத்தப்பட்ட படகுகளை ஆளமான
பகுதியில் நிறுத்தி வைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பாக
தொழில் மற்றும் எரிபொருள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வருகைதரும்
படகுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத விகையில் பொறிமுறையை வகுத்து தீர்வுகளை
காணுமாறும் துறைசார் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

minister-douglas-field-visit-myality

இதேவேளை தடைசெய்யப்பட்ட சுருக்குவலை தொழில் நடவடிக்கைகளும் இப்பகுதியில்
அதிகரித்து வருவதாகவும் அவற்றையும் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை
மேற்கொள்ளுமாறும் அமைச்சரிடம் கடற்றொழிலாளர்கள் கோரியிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்திய அமைச்சர் அவ்வாறான தொழில்
நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்க கூடாதெனவும் அவ்வாறு செயற்படும்
தரப்பினரை தடுப்பதுடன் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த நடவடிக்கை
எடுக்குமாறும் உரிய தரப்பினருக்கு உத்திவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

420 ரூபாவை அடைந்த டொலர்: இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென வந்த அறிவிப்பு - அமைச்சரின் தகவல்

420 ரூபாவை அடைந்த டொலர்: இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டாமென வந்த அறிவிப்பு – அமைச்சரின் தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

இலங்கை அரசியல்

இலங்கை பொருளாதாரம்