Home இலங்கை சமூகம் தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

தேசிய அடையாள அட்டை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

0

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இதுவரை தங்கள் தேசிய அடையாள அட்டை உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெறாத விண்ணப்பதாரர்கள் தற்போது அதனை பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

விசேட அறிவிப்பு 

அதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 8:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை ஆட்பதிவாளர் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் அதனை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலி, குருநாகல், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் நுவரெலியாவில் உள்ள கிளைகளிலும் அவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version